கடந்தாண்டு, ஹிந்தியில் வெளியாகி, பெரும் சர்ச்சையையும்,பரபரப்பையும் ஏற்படுத்திய, லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தை, நெட்பிளிக்ஸ், தெலுங்கில், ரீ மேக் செய்கிறது. இந்த படம், நான்கு தனித்தனி கதைகள் உடைய குறும்படங்களை போன்றது. இதில், ஒரு பாகத்தில் நடிப்பதற்கு, ஆடை படத்தில், தன் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, ‘இனிமேல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். அது, ஹீரோயின் கதாபாத்திரமாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்ற முடிவுடன் உள்ள அமலாபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதனால், சந்தோஷத்தில் இருக்கிறார், அமலாபால்.
முத்தக் காட்சிகளில் நடிப்பது பற்றி தமன்னா
இன்று தென்னிந்தியத் முன்னணி நடிகை தமன்னா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பெட்ரோமாக்ஸ்’ படம் வெளியாக உள்ளது. அவர் முத்தக் காட்சிகளில் நடிப்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதாவது, “இன்னும் சினிமாவில் நான் முத்தக் காட்சியில் நடித்தது கிடையாது. நான் நடிக்க வந்ததிலிருந்து அதைத் தொடர்கிறேன். நான் சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். சில விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று 13 வயதிலேயே நினைத்துவிட்டேன். அதை மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.