ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‛தர்பார்’. படத்திற்கு அனிருத் இசையமைத் துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அடுத்தபடியாக சிறுத்தை சிவா இயக்கும், ரஜினி 168வது படத்தின் ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கியுள்ளது. ரஜினியுடன் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், விவேக், சூரி உள்பட பல நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.
அமலாபால் புகைப்படம் வைரல்
அமலாபால் ஆடை படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அவரது நடிப்புக்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்தன. அதேசமயம், அவர் ஆடை படத்தில் நடித்திருந்ததை காரணம் காட்டி, அவரை விஜய் சேதுபதியின் படத்தில் இருந்து நீக்கினார்கள். இருப்பினும், புதிய படங்கள் வரும் என்று எதிர்பார்த்த அமலாபாலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தனது கவர்ச்சிகரமான போட்டோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் அமலாபால். தற்போது கடலுக்கு நடுவே ஊஞ்சலில் தொங்குவது போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.