சிபிராஜ் படத்தில் புது நடிகை
சிபிராஜ் நடித்து வரும் படம் ‘கபடதாரி’. சிபிக்கு ஜோடியாக நந்திதா நடிக்க நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே. ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது இவர்களுடன் கமலின் ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் நடித்த பூஜா குமார் இணைந்திருக்கிறார். இப்படத்திற்கு இசை சைமன் கே.கிங், ஒளிப்பதிவு ராசாமதி, படத்தொகுப்பு கே.எல்.பிரவீண், கலை இயக்குநராகப் விதேஷ். ஹேமந்த் ராவ் கதைக்கு ஜான் மகேந்திரன் மற்றும் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் இருவரும் இணைந்து திரைக்கதை வசனம் எழுதுகின்றனர். சத்யா, சைத்தான் படப்புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்குகிறார்.
ரஜினிகாந்த் வெளியிட்ட அந்த நாள் போஸ்டர்
கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் “அந்த நாள்” அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் நேற்று மாலை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் ஏவிஎம்.சரவணன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், ‘அந்த நாள்’ படம் வெற்றி பெறவும் வாழ்த்துக் கூறினார் ரஜினிகாந்த்
மீண்டும் விஜய்யுடன் இணையும் வில்லன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்ப்து முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் விஜய்யுடன் வில்லன் நடிகர் தீனாவும் நடிக்கிறார்.