கமலுடன் இணையும் அம்ரிதா ராம்

கமல் 60 – 3 நாட்கள் கொண்டாட்டம்

5 வயதில், களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய கமல்ஹாசனின் திரைப்பயணம், விஸ்வரூபம் 2 வரை திரையுலகில் 60 ஆண்டுகளை கமல் கடந்ததை கொண்டாடும் விதமாக நவ., 7, 8, 9 தேதிகளில் ராஜ்கமல் பிலிம்ஸ் ஒரு தொடர் கொண்டாட்ட பற்றி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை;நவ.,7: கமல் பிறந்த நாளான அன்று தான் அவரது தந்தை சீனிவாசனின் நினைவு நாள் ஆகும். அன்று, பரமக்குடியில், தந்தையின் சிலையை, கமல் திறந்து வைக்கிறார். நவ.,8சினிமா உலகில் குருவான பாலசந்தர் சிலையை, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு திறந்து கமல் வைக்கிறார். இதில் பாலசந்தர் குடும்பத்தினர், சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். மஹாத்மா 150வது பிறந்த நாளை முன்னிட்டு, மதியம் 3.30 மணியளவில், ” ஹே ராம்” படம் திரையிடப்பட உள்ளது. நவ.,9கமலின் 60 ஆண்டு கலைபயணத்தை கொண்டாடும் வகையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினி மற்றம் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கமலுடன் இணையும் அம்ரிதா ராம்

கமல் நடிப்பிலும் இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலும் உருவான படம் இந்தியன். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னைக்கு அருகில் இருக்கும் ஈ.வி.பி., ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டது. பொள்ளாச்சியிலும் படபிடிப்பு நடந்தது. ராஜமுந்திரி சிறைச்சாலையில் படமாக்கப்பட்டது. சென்னை, திருவல்லிக்கேணியிலும் படபிடிப்பு நடந்தது.
இதையடுத்து, மத்திய பிரதேச மாநிலம் போபாலில், இரண்டாயிரம் துணை நடிகர்கள் நடிக்க, பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள் படமாக்கல் நடைபெற்றது. தற்போது அங்கு படப்பிடிப்புகள் முடிவடைந்ததையடுத்து படக்குழு மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் என்ற இடத்தில் நேற்று முதல் (அக்டோபர் 29)  தொடர்ந்து 12 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் கமலுக்கான ஆடை வடிவமைப்பாளராக அம்ரிதா ராம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே விஸ்வரூபம் படத்திலும் கமலுக்கு ஆடை அலங்கார நிபுணராக பணியாற்றினார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலும், தொகுப்பாளர் நடிகர் கமலுக்கான ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். 95 வயதுடைய சேனாபதி கேரக்டரில் நடிக்கும் நடிகர் கமல் மற்றும் அவரது மனைவியாக வரும் 85 வயது அமிர்தவள்ளியான நடிகை காஜல் அகர்வால் இருவருக்கும், அமர்தா ராம் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.